குற்றம்

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகன்: கூலிப்படை வைத்து கொன்றார் அம்மா!

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகன்: கூலிப்படை வைத்து கொன்றார் அம்மா!

webteam

சுமார் 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற அம்மா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண் ராம்தாஸ் (21). போதைக்கு அடிமையானவர். இவர், அவர் உறவினர்கள் உட்பட 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போதையில் பலரை டார்ச்சரும் செய்துள்ளார். மகனை திருத்த முயன்றும் அம்மாவால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்ற அம்மாவையும் வளர்ப்பு தாயையுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது அம்மா, ராம்சரணை கொல்ல முடிவெடுத்தார். இதற்காகக் கூலிப்படைக்கு முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அவர்கள், ராம்சரணை, வாசி என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொன்றனர். இதையடுத்து கொலை செய்ய தூண்டிய அம்மாவையும் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளார். 

பெற்ற அம்மாவே மகனை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.