குற்றம்

பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஆந்திராவில் பதுங்கிய பெரியப்பா கைது!

பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஆந்திராவில் பதுங்கிய பெரியப்பா கைது!

webteam

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி ஆந்திராவில் பதுங்கிய சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வசித்து வருபவர் முனியப்பன். சலவைத்தொழிலாளி. அதே வீட்டில் முனியப்பன் மனைவியின் தங்கையும் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மனைவியின் தங்கை மகளான 9 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செ‌ய்துள்ளார் முனியப்பன். இதுபற்றி தனது பாட்டியிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து ஆத்திரம் அடைந்த பாட்டி, முனியப்பனிடம் சண்டை போட்டுள்ளார்.‌ இதையடுத்து தப்பியோடிய முனியப்பன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

இதுகுறித்து ஆம்பூர் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆந்திர மாநிலம் மாடிரெட்டிப்பள்ளியில் பதுங்கியிருந்த முனியப்பனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. சொந்த பெரியப்பாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.