மசாஜ் செய்வதாகக் கூறி நெதர்லாந்து நாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்திருந்த பெண் ஒருவர், ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்வதற்காக, அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது மசாஜ் செய்து கொண்டிருக்கும்போது அந்த பெண்ணிடம் அந்நபர் அத்துமீறி நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற நெதர்லாந்து பெண் போலீசிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் மசாஜ் சென்டருக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த நபர் தப்பியோடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நான்கு மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கேரளாவுக்கு தப்பியோட முயன்ற அந்நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிந்தி முகாம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாம்: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு பெண்கள் கொடுத்த கொடூர தண்டனை!