மும்பை அருகே பெண்ணை பாலியல் வன்முறை செய்து ரூ.30 லட்சம் மோசடி செய்த இன்சூரன்ஸ் ஏஜெண்டை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை அந்தேரியை சேர்ந்த பெண் ஒருவர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார். 49 வயதான அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் பழகிய பின் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவன் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை ரகசியமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்ட அவர், அதை வைத்து அந்தப் பெண்ணை அடிக்கடி மிரட்டி, உல்லாசம் அனுபவித்துள்ளார். பணம் பறிக்கும் வேலையையும் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரை, தானே அருகேயுள்ள லோகேஸ்வரி என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள், பணம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் ரூ.30 லட்சம் வரை அந்த ஏஜெண்டை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.