குற்றம்

ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை

ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை

Rasus

சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் இந்துஜா. இவரை ஆகாஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால் ஆகாஷின் காதலை இந்துஜா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்துஜா மீது ஆகாஷிற்கு அதிக கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் இந்துஜா நேற்று நின்றுகொண்டிருந்தபோது ஆகாஷ் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்துஜா மட்டுமின்றி தாயார் ரேணுகா மற்றும் அவரது சகோதரி நிவேதா மீதும் பெட்ரோல் ஊற்றிய ஆகாஷ், அவர்களையும் தீ வைத்து கொளுத்தியிருக்கிறார். உடல் கருகிய மூவரையும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். ரேணுகா, மற்றும் நிவேதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.