சென்னை பழவந்தாங்கலில் அக்காவை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
சென்னை பழவந்தாங்கல் பக்தவச்சலம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மூத்த மகள் சாந்தி (38). இளைய மகன் சங்கர்(37). அக்கா, தம்பியான இவர்களுக்குள் நேற்று திடீரென சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது சாந்தி, தனது தம்பியான சங்கரின் வாயில் குத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், தனது அக்கா என்றும் பாராமல் சாந்தியின் கழுத்தில் கம்பியால் குத்தியுள்ளார். மேலும் அதே கம்பியை கொண்டு சாந்தியின் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார்.
இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாந்தியை கொலை செய்த அவரது தம்பி சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.