பந்தியில் சிக்கன் பரிமாறாததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் அன்வர். இவரது உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. சென்றிருந்தார். அங்கு மற்றொரு உறவினரான அஷ்பக் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த உடன் கறி விருந்து வைக்கப்பட்டது. அப்போது அஷ்பக்கிற்கு சிக்கன் கறி வைக்கவில்லையாம்.
இதுபற்றி பரிமாறுபவரிடம் கோபமாகக் கேட்டார் அஷ்பக். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு சென்ற அன்வர், அவர்களை சமாதானப்படுத்த முயன்றாராம். அப்போது அஷ்பக் மற்றும் சிலர் சேர்ந்து அன்வரை கத்தியால் குத்தினர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அன்வரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இதையடுத்து அஷ்பக் உள்ளிட்ட நான்குபேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிக்கன் கறிக்காக, கொலை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.