கைதானவர்
கைதானவர் PT Desk
குற்றம்

ஷூட்டிங் ரூபாய் நோட்டை வைத்து ஸ்நாக்ஸ் வாங்கிய துணை நடிகர்.. கையும் களவுமாக சிக்கியது எப்படி?

webteam

சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டை சென்னை கமலா திரையரங்கில் பயன்படுத்திய சினிமா துணை நடிகர் கைது.

ஏமாறுபவர்கள் இருக்க, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வருவதை தடுக்கும் விதமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இந்நாட்களில் சினிமா ஷுட்டிங்கிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த போலியான ரூபாய் தாளைக்கொண்டு ஒருவர் கேன்ட்டீனில் உணவு வாங்கும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐயப்பன் ராஜ் (23) சினிமா துணை நடிகராகவும் தயாரிப்பு உதவி அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை கமலா திரையரங்கில் 500 ரூபாய் பயன்படுத்தி உணவு பொருட்கள் வாங்கும் போது ஊழியர்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

கைதானவர்

சினிமா படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ஐயப்பன் ராஜ் சாலிகிராமத்தில் அருணாச்சலம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார்.

தியேட்டரில் போலி ரூபாய் நோட்டு கொடுத்து கையும் களவுமாக பிடிபட்ட ஐயப்பன் ராஜை அவர் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது ஆறாயிரம் ரூபாய் மதிப்பிலான ஷுட்டிங்கில் பயன்படுத்தக் கூடிய போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன் ராஜை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.