குற்றம்

கூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல்: ’சல்மான் கான் பாதுகாவலருக்கு வலை

கூட்டுப் பாலியல் வன்முறை மிரட்டல்: ’சல்மான் கான் பாதுகாவலருக்கு வலை

webteam

நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் என கூறி, கூட்டுப்பாலியல் வன்முறை செய்துவிடுவதாக, தொண்டு நிறுவன பெண் அதிகாரியை மிரட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை, கர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், ஆபாசமாக பேசிய அவர், கும்பலுடன் வந்து கூட்டுப் பாலியல் வன்முறை செய்துவிடுவதாக மிரட்டினார். பின்னர் போனை அணைத்துவிட்டார். இந்த மிரட்டலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் நிர்வாகி, கர் போலீசில் புகார் செய்தார். 
போலீசார் அந்த நபரை தேடிவருகின்றனர்.