குற்றம்

வீட்டில் போலி காசோலை அச்சடித்து ரூ.1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபர்

Sinekadhara

வீட்டிலிருந்த கணினியில் போலி காசோலைகளை அச்சடித்து ரூ. 1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் மேலும் விலையுயர்ந்த 3 ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கியது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 42 வயதான கேஸே வில்லியம் கெல்லி. இவர் தனது வீட்டு கணினியில் அச்சடித்த காசோலையைக் கொடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான புதிய போர்ஷ் 911 காரை ஜூலை 27ஆம் தேதி வாங்கியிருக்கிறார். அவர் கொடுத்த காசோலை போலியானது என கண்டுபிடித்த வால்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் போலீஸில் புகார் தெரிவித்தது.


ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் காரின் அருகில் நின்று கெல்லி போஸ் கொடுப்பதை போலீஸார் படமெடுத்து வெளியிட்டனர்.

போலி காசோலையில் காரை வாங்கிய ஒருநாள் கழித்து, கெல்லி மற்றொரு போலி காசோலையைக் கொடுத்து மூன்று ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கியது தெரியவந்தது.
அவர்மீது வழக்குபதிவு செய்து கைதுசெய்த போலீஸார் அவரிடமிருந்து பல போலி காசோலைகளையும் நோட்டுகளையும் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.