மது வாங்க பணம் தராததால் 65 வயதான தனது தாயை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், தலையை தனியாக துண்டித்து, தலையுடன் தலைமறைவானான் கொடூர மகன்.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த கிராமத்தில் ஒளிந்திருந்த 45 வயதான அந்த கொடூரனை போலீசார் பிடித்துச் சென்றனர். கொலை குறித்து கொலையாளியின் அண்ணன் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.