குற்றம்

ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்வதாகக் கூறி நகை, பணம் பறித்த நபர் கைது

Sinekadhara

மறைமலைநகரில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்வதாகக் கூறி இருவரை நம்பி வரவழைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பெரிய தெருவைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்துவருவதாகவும் தொடர்புக்கு என எண் வைத்து அதில் தொடர்பு கொள்ளும்படி விளம்பரப்படுத்தியுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து இரு நபர்கள் இம்ரானை தொடர்பு கொண்டபோது காட்டாங்கொளத்தூர் பகுதியில் ஒரு வீட்டிக்கு வரவழைத்துள்ளார். அருடைய பேச்சை நம்பிவந்த நபர்களை இம்ரான் கடுமையாக தாக்கியதுடன் அந்த நபர்களிடமிருந்து 4ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் ஏற்கெனவே இருநபர்களை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மறைமலைநகர் காவல்துறையினர் ரகசியமாக இம்ரானை நோட்டமிட்டு கைது செய்தனர். இம்ரான் காட்டாங்கொளத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகக்கூறி நகை, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டதால் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.