குற்றம்

சென்னையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை: 95 சவரன் பறிமுதல்

சென்னையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை: 95 சவரன் பறிமுதல்

Sinekadhara

சென்னையில் பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு, கொள்ளையடித்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 95 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஐசிஎஃப் பகுதியில் இரவு நேர ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காவல்துறையினரை கண்டதும், வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கியுள்ளார். உடனடியாக விரட்டிச் சென்று காவல்துறையினர் பிடித்தபோது, அவரிடம் கத்தி, இரும்பு ராடு, சுத்தியல் போன்ற ஆயுதங்கள் இருந்தன. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் ஓட்டேரியை சேர்ந்த ஜெபராஜ் என்பதும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததையும் ஒப்புக் கொண்டார்.

சென்னையின் பல்வேறு இடங்களில், ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்ததும், ஐசிஎஃப் பகுதியில் மட்டும் 13 வீடுகளில் கைவரிசை காண்பித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை அவரிடம் இருந்து வாங்கியதுடன் அவரை பிடித்துச்சென்று விசாரித்து, 95 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.