ஐபிஎல் போட்டியை ரசித்த இளம் டீச்சருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மும்பை- டெல்லி அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். போட்டியை காண டீச்சர் ஒருவர் தனது மாணவர்களுடன் வந்தார். போட்டி நடந்துகொண்டிருக்கும்போது, டீச்சரிடம் வந்து தண்ணீர் பாட்டில் வேண்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என்றார் டீச்சர். பின்னர் அடிக்கடி வந்து கேட்டுக்கொண்டே இருந்தார் அந்த இளைஞர். இதனால் கடுப்பான டீச்சர் சத்தம் போட்டார். இதையடுத்து அவரைக் காணவில்லை.
இந்நிலையில் போட்டி முடிந்த பின், இரவில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வாயில் அருகே வரும்போது, பின்னால் வந்த அந்த இளைஞரை, டீச்சரிடம் ஆபாசமாக நடந்துகொண்டார். அவரை பல்வேறு இடங்களில் தொட்டு பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பியோடினார். இது பற்றி கொஞ்சம் தூரத்தில் நின்ற போலீஸ்காரர்களிடம் சொன்னார் டீச்சர். அவர்கள் ஓடிச் சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் கென்ட்ராஜ் சட்னாமி என்பதும் வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.