குற்றம்

மனிதாபிமானம் காட்டிய போலீஸ்.. ஆனால் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைது..!

மனிதாபிமானம் காட்டிய போலீஸ்.. ஆனால் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைது..!

Rasus

முதலமைச்சர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் புவனேந்திரன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. புவனேந்திரன் தன்னுடைய தந்தையின் கைபேசியை எடுத்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு அந்த நபரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனா். விசாரணையில் மிரட்டல் விடுத்தவா் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தைச் சோ்ந்த புவனேஷ்வரன் (28) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.

இவா், ஏற்கெனவே தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதலமைச்சர், திமுக தலைவர், திரைப்பட நடிகா்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பதும் தெரியவந்தது. கடந்த முறை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்திருந்தார். அப்போது அவரை கண்டுபிடித் போலீஸ் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனால் கைது செய்யவில்லை. ஆனால், அவரது பெற்றோரை எச்சரித்ததுடன், புவனேஷ்வரனிடம் தொலைபேசி கிடைக்காத வகையில் பார்த்துக் கொள்ளுமாறும், அவரை உரிய கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினா். இருப்பினும் தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மரக்காணம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்