குற்றம்

சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் தகாத உறவால் வந்த வினை

சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் தகாத உறவால் வந்த வினை

webteam

சென்னையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷயா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது 6 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பிரபாகரன்(40)
என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் தாயார் சத்தம் போட்டுள்ளார். உடனே பிரபாகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அவரது உறவினர்களோடு திருவான்மியூர் சென்று பிரபாகரனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் பிரபாகரனை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், “பிரபாகரன் புளியந்தோப்பை சேர்ந்தவர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் சிறுமியின் தாய்க்கும் கடந்த 3 வருடங்களாக திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்” என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருவான்மியூர் போலீசார் பிரபாகரனை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.