மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோஷன் சதாசிவ். விவசாயியான இவர் விவசாயம் நலிவடைந்ததால், பால் மாடு வாங்கி தொழில் நடத்துவதற்காக கடந்த 2021 இல் உள்ளூர் கந்துவட்டி கும்பளிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். அந்த தொகையில் மாடும் வாங்கி இருக்கிறார். ஆனால், தொழில் தொடங்குவதற்கு முன்பே வாங்கிய மாடுகள் இறந்துவிட, வறுமையில் வாடிய ரோஷன் அந்த கடன்தொகையை திரும்ப தரமுடியாமல் தவித்திருக்கிறார். கடன் தொகையின் மீது வட்டி மீது வட்டி கூடி 74 லட்சமாக அதிகரித்ததாக கந்துவட்டிகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தன்னிடம் இருந்த டிராக்ட்டர், விவசாய நிலம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை விற்று கடன்தொகையை திருப்பி செலுத்தியிருக்கிறார். வாங்கிய கடனிருக்காக கிட்ட தட்ட 48.53 லட்சம் கொடுத்தும் அவரால் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்த ஒருவர் கடன் தொடையை அடைக்க உனக்கு ஒரு வழி இருக்கிறது, உன்னுடைய கிட்னியை விற்றால் கடன் அடைக்க முடியும் என கூறியிருக்கிறார். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் அதிகரிக்கவே கிட்னியை விற்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பின் கொல்கத்தாவில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கிட்னி விற்பதற்காக கம்போடியா அனுப்பப்பட்டிருக்கிறார். அக்டோபர் 14, 2024 அன்று சட்டவிரோதமாக ரோஷனுக்கு உறுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதன் மூலம் அவருக்கு 8 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனாலும் அவரால் முழு கடன் தொகையை கொடுக்க முடியவில்லை. அவரை லோவோஸ் நகரில் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்க ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கிருந்து பிரம்மபுரி தொகுதி எம்.எல்.ஏ.விற்கு தகவல் கொடுத்தார். அரசியல்வாதிகளின் தலையிட்டு தூதகரம் வாயிலாக, ரோஷன் அங்கிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டார்.
பின் தான் எப்படி பிரச்னையில் சிக்கிக்கொண்டேன், வலுக்கட்டாயமாக தன்னுடைய கிட்னியை விற்றது மற்றும் வெளிநாட்டில் கொத்தடிமையாக சிக்கிக்கொண்டது தொடர்பாகவும் கவால்துறையைனரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து காவல் துறையினர் அவரை தொடர்புகொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் FIR பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றும் விசாரணை செய்து வரப்படுகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
-ராஜ்குமார்.ர