குற்றம்

“எங்கள் பணத்தை எல்லாம் ஏமாற்றிவிட்டார்கள்” மனு கொடுக்க வந்த இடத்தில் மயங்கி விழுந்த பெண்

kaleelrahman

7,500 பெண்களிடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய நிதி நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மதுரை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மதுரம் பிராப்பர்டீஸ் ரூ புரோமோட்டர்ஸ் என்கிற நிதி நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பெண்களை முகவர்களாக கொண்டு 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் 7,500 பேரிடம் பணம் வசூல் செய்துள்ளனர்,

2016ஆம் ஆண்டு திட்டம் முதிர்வுற்ற நிலையில் நிதி நிறுவனத்திடம் பயனாளிகள் பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தை திரும்ப தராமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது, 4 ஆண்டுகளாக மக்களுக்கு தர வேண்டிய 1 கோடியே 50 இலட்சம் பணத்தை தராமல் நிதி நிறுவனத்தினர் எமாற்றி வருவதாகவும், பணத்தை கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்,

அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும் புகார் அளிக்க வந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பலரையும் வேதனையடையச் செய்தது. மோசடி குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்ட போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.