மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய தற்காலிக விரிவுரையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையின் தலைவராக உள்ளவர் ஜெனிஃபா செல்வன். இந்த துறையில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் ஜோதிமுருகன். இவரை ஜெனிஃபா பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று ஜெனிபாவை சந்திப்பதற்காக அவரது துறைக்கு சென்ற ஜோதிமுருகன் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
ஜெனிஃபா கூச்சலிட மாணவர்களும், ஆசிரியர்களும் ஜோதிமுருகனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஜெனிஃபா ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தன் மீது நடவடிக்கை எடுத்ததால் ஜெனிஃபாவை கத்தியால் குத்தியதாக ஜோதிமுருகன் கூறியுள்ளார்.