குற்றம்

மதுரை: சினிமா பாணியில் ஓடும் லாரியில் எறி ஜவுளி பொருட்களை திருடியதாக 5 பேர் கைது

மதுரை: சினிமா பாணியில் ஓடும் லாரியில் எறி ஜவுளி பொருட்களை திருடியதாக 5 பேர் கைது

kaleelrahman

நெடுஞ்சாலை சினிமா பாணியில் மதுரை தே.கல்லுப்பட்டியில் ஓடும் லாரியில் ஏறி ஜவுளி பொருட்களை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டியில் கடந்த 31ஆம் தேதி ஓடும் லாரியில் ஏறி ஜவுளிகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்டம் வலையபட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் தே.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் இதற்காக தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் செக்கானூரணி அருகேயுள்ள நடுமுதலைக்குளத்தை சேர்ந்த பாரத் (31) சதீஷ் (20), கொசவபட்டியை சேர்ந்த விஜி (35), சந்திரசேகர் (27) மற்றும் சின்னகருப்பன் (20) ஆகிய 5 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்கள் இதேபோன்று தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தே.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.