கேரள இளைஞர் கைது pt desk
குற்றம்

மதுரை | ரயிலில் கடத்தி வந்த 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் - கேரள இளைஞர் கைது

மதுரையில் ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கேரளாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரிட்டா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவில் - திருநெல்வேலிக்குச் விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு வந்தடைந்து.

Arrested

இதனிடையே அந்த ரயிலில் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கிரண்ராஜ் என்பவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அவரிடமிருந்து சுமார் 12.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 12.5 கிலோ கஞ்சாவை மதுரை மாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.