குற்றம்

காதல் விவகாரத்தில் இளைஞர் தீக்குளிப்பு: பெண்ணின் தந்தை மீது வழக்குப்பதிவு

காதல் விவகாரத்தில் இளைஞர் தீக்குளிப்பு: பெண்ணின் தந்தை மீது வழக்குப்பதிவு

webteam

பெண் கேட்க சென்றவர் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றது தொடர்பாக திருத்தணி அதிமுக நகர செயலாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடற்படையில் பணியாற்றிவரும் ராகேஷ் என்பவரும் திருத்தணி அதிமுக நகர செயலாளர் சௌந்தரராஜனின் மகள் அஸ்வினியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலியை பெண் கேட்டு ராகேஷ் குடும்பத்தினர், சௌந்தரராஜனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி ராகேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இனி தனக்கு பெண் தர செளந்தரராஜன் சம்மதிக்கமாட்டார் என கருதி தீ வைத்துக்கொண்டதாக ராகேஷ் கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீ வைத்தது செளந்தரராஜன் குடும்பத்தினர் தான் என ராகேஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ராகேஷின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சௌந்தரராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ராகேஷுக்கு சென்னை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.