குற்றம்

`லஞ்சம் வாங்கிட்டுதானே செய்றீங்க...' வாகன ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய லாரி ஓட்டுநர் கைது

நிவேதா ஜெகராஜா

உதகை மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளரை வாகன தனிக்கையின் போது தரக்குறைவாக பேசிய லாரி ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் (RTO ENFORCEMENT) விஜயா என்பவர், குன்னூர் பேருந்து நிலையச் சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட ஒளிப்பான்- ஐ பயன்படுத்திய லாரியை அவர் பிடித்துள்ளார். அதனை அகற்றக் கூறி அறிவுறுத்தியும் உள்ளார். அப்போது அங்கு வந்த குன்னூர் சின்ன கரும்பாலத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், `லஞ்சம் வாங்கிட்டுதானே விதிமீறலை அனுமதிக்கிறீர்கள்... தேவையென்றால் லாரியில் இருந்து ஒளிப்பான்- ஐ நீங்களே கழட்டிக் கொள்ளுங்கள்’ என்று விதண்டாவதமாக வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் நசீர், சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். பின்னர் பொது இடத்தில் தகாத வார்தைகளில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்த அவர், அவரை கைதும் செய்தனர். பின்னர் ஸ்டேஷன் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். போக்குவரத்து ஆய்வாளர் விஜயா புகார் கொடுக்காமல், தாமாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்த இச்சம்பவம் அப்பகுதியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.