சென்னை தியாகராய நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை திநகர் கோலமாமணி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பால் வியாபாரி செந்தில்குமார், வீட்டை பூட்டிவிட்டு பிரசவமான தன் மனைவியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்ட செந்தில்குமார் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் 5,25,000 ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.
செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், பசுல்லா சாலையிலுள்ள தனியார் காபி சென்டரில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 20 ஆயிரத்து 820 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.