குற்றம்

புதுக்கோட்டை: தம்பியை கொலை செய்த குடும்பத்தினர் மூவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: தம்பியை கொலை செய்த குடும்பத்தினர் மூவருக்கு ஆயுள் தண்டனை

webteam

தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணன் மகன் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே கூகனூரை சேர்ந்த பாலையாவை என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளான அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சுப்ரமணியன் அவரது மகன் விக்னேஸ்வரன் மற்றும் உறவினர் வீரமணி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சுப்பிரமணியனின் மூத்த மகன் குமார் மனைவி தேவியுடன் விக்னேஸ்வரன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனை சித்தப்பாவான பாலையா,குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தட்டிக் கேட்டுள்ளார்.அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் வீரமணி ஆகியோர் அரிவாள் ஈட்டி இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்களை கொண்டு பாலையாவை வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர்.