குற்றம்

நிலத்தகராறில் தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்த பகை - அரிவாளால் வெட்டி இருவர் கொலை

நிலத்தகராறில் தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்த பகை - அரிவாளால் வெட்டி இருவர் கொலை

webteam

பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சி நடு இருங்களுரைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ். இவரது மகன்கள் ஆரோக்கியசாமி மற்றும் ரோக்குராஜ். இவர்கள் இருவரும் இருங்களூர் நடுகரை ஆற்றோர பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தின் சில பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் ஆரோக்கியசாமியை ரோக்குராஜ் வெட்டி கொலை செய்துள்ளார். இதற்காக சிறைத் தண்டனை அனுபவித்த ரோக்குராஜ் வெளியே வந்துள்ளார்.

ரோக்கு ராஜூக்கு ஜான்டேவிட் என்ற மகனும், ஆரோக்கியசாமிக்கு ஜேசுராஜ் என்ற மகனும் உள்ளனர். ஜான் ஆட்டோ ஓட்டுனராகவும், ஜேசுராஜ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று விவசாய வேலைகளை கவனித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு வாகனம் செல்வதற்கான பாதை அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜூம், அவரது மகன் பிரான்ஸிஸூம், ரோக்குராஜ் மற்றும் அவரது மகன் ஜான்டேவிட் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். எதிர்தாக்குதலில் படுகாயமடைந்த ஜேசுராஜ் மற்றும் மகன் பிரான்ஸிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவைடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.