கொலை செய்யப்பட்டவரின் வீடு
கொலை செய்யப்பட்டவரின் வீடு புதியதலைமுறை
குற்றம்

சென்னை: வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்மணி.. பக்கத்துவீட்டு இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

PT WEB

திருவான்மியூர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த மூவரை கைது செய்த போலீசார்.

சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தில் வசித்து வருபவர் பொன்னி(58). இவரது மருமகன் ஐயப்பன்(40), பொன்னியின் மகள் 3 வருடமாக தனியாக வசித்து வருகிறார்கள்.

மாமியாரும் மருமகனும் வசித்து வந்த நிலையில், நேற்று காலை ஐயப்பன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சமையலறையில் பொன்னி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐயப்பன் தகவல் கொடுத்ததன் பேரில் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த நபர் குறித்து அறிய அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்தனர்.

கொலை செய்யப்பட்ட பொன்னியின் வீட்டில் அருகில் வசித்து வரும் அருள்மணி (19) என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்களான பெசண்ட் நகரை சேர்ந்த விக்னேஷ் (20), திருவான்மியூரை சேர்ந்த தினகரன் (21) ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் அருள்மணியும் அவரது நண்பர்களும் வீட்டில் மது அருந்துவது, பெண்களை அழைத்து வந்து மகிழ்ச்சியாக இருப்பது என கொண்டாட்டமாக இருந்துள்ளனர். இந்த விவரத்தை அருள்மணியின் வீட்டில் பொன்னி தெரிவித்ததால் ஆத்திரத்தில் மூவரும் திட்டமிட்டு பொன்னியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடியதாக வாக்குமூலம் அளித்தனர். மூவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.