குற்றம்

குன்றத்தூர் செயின் பறிப்பு சம்பவம்: ஒருவர் சிக்கினார்..!

குன்றத்தூர் செயின் பறிப்பு சம்பவம்: ஒருவர் சிக்கினார்..!

Rasus

குன்றத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குன்றத்தூரில் கடந்த 10-ம் தேதி, அசோக் குமார், ஜெயஸ்ரீ தம்பதி குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இரண்டு இளைஞர்களில் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்தார். சில விநாடிகளில் அவர் ஜெயஸ்ரீ கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடினார்.

இதில் நிலைதடுமாறி ஜெயஸ்ரீ கீழே விழ அவரது கணவர் கொள்ளையனைத் துரத்திச் சென்றபோதும், கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா மற்றும் சாலமன் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் நண்பர்கள் என்பதும், நீண்ட நாட்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜெயஸ்ரீயிடம் இருந்து செயினைப் பறித்துச் சென்ற சிவா, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான சாலமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.