செய்தியாளர்: ஜி.பழனிவேல்
கிருஷ்ணகிரி பழைய பெங்களூரு சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜன் என்ற ஆசிரியர், பேருந்துக்காக சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மூன்று சிறார்கள் கற்களால் அவரை தாக்கி செல்போன் பணம் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து மூன்று சிறார்களை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட டேவிட் ராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டேவிட் ராஜன் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் என தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவிட் ராஜன் புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்...