சென்னை பல்லாவரம் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை அடித்துக்கொன்றதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லாவரத்தை அடுத்த சிவசங்கர் நகரில் கண்ணன், நரேஷ், சதீஷ் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களை வழிமறித்த ராஜேஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் அவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தர மறுத்த மூவரும், கையிலிருந்த இரும்புக்கம்பியால் ராஜேஷை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதில் படுகாயமடைந்த ராஜேஷ் , மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீஸார், கண்ணன், நரேஷ், சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.