Arrested pt desk
குற்றம்

கரூர் | பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்றதாக 5 பேர் கைது - 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கரூரில் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: வி.பி. கண்ணன்

கரூரில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ரவுடி தடுப்பு பிரிவு போலீசார், கரூர் - மதுரை புறவழிச் சாலையில் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது பேருந்து ஒன்றில் 12 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கஞ்சாவை கடத்திச் சென்ற நாகேந்திரன், ராம்குமார், செந்தில்குமார், யோகேஸ்வரன் நவீன்ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் 5 பேரும் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 12 கிலோ கஞ்சாவை சேலம் வரை கொண்டு வந்துள்ளனா.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து பேருந்து மூலம் மதுரைக்கு எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.