குற்றம்

கரூர்: வாகன சோதனையில் சிக்கிய 42 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

webteam

ஆந்திராவில் இருந்து கரூர் வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்துள்ளனர்.

கரூரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் ஏற்றி செல்லும் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் மற்றும் சின்னதாராபுரம் காவல் நிலையப் போலீசார் கரூர் மாவட்டம் தென்னிலையில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் 42 கிலோ கஞ்சா பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை கடத்துவதற்கு பயன்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், லாரியில் கஞ்சாவை கடத்தியதாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கௌதம், ராம்குமார், கரன்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்