குற்றம்

சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் மனு

சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் மனு

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு செய்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். முன்னதாக இந்த வழக்கு டெல்லியில் நடந்து வரும் நிலையில் இது தொடர்பான மனுவை சென்னையில் தொடர முடியாது எனக் கூறி சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அனுமதித்த அளவை விட அதிகமாக அன்னிய முதலீட்டை பெற்று முறைகேடு செய்தது என்றும் இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார் என்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு விசாரணையில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கார்த்தி சிதம்பரம் மனு செய்துள்ளார்.