செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள பேகுரு கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களது 5 வயது பெண் குழந்தை உட்பட 4 பேர் குத்திக் கொலைப்பட்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனே நிகழ்விடத்துக்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், தனிக் குழு அமைத்து கிரிஷ்ஷை தேடிப் பிடித்து கைது செய்தனர். கொலைக்கான முழுமையான காரணம் விசாரணைக்குப் பின் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.