இளைஞர் கைது pt desk
குற்றம்

காஞ்சிபுரம் | போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞர் கைது

மணிமங்கலம் அருகே போதைப் பொருட்கள் விற்பனை ; இளைஞர் கைது செய்து 150 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸ்.

PT WEB

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே செரப்பணஞ்சேரி பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு , வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், சேரப்பணஞ்சேரி, பஜார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, பெரியார் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கர்நாடகாவில் இருந்து குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை வஸ்துக்கள் கொண்டு வந்து பதுக்கி விற்கப்பட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனை அடுத்து, 150 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த மணிமங்கலம் போலீசார் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சித்திரைச் செல்வன் (35) என்பவனை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.