மத்தியப்பிரதேசத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்தை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய விவகாரம் தொடர்பாக காவலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்த்வாரா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத் வந்தார். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ரத்னேஷ் பவார், அவரை நோக்கி துப்பாக்கியை எடுத்து காட்டினார். நேற்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அந்தக் காவலர், கமல் நாத்தை நோக்கி எதற்காக துப்பாக்கியைக் காண்பித்தார் என்பதைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.