இளைஞர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

கள்ளக்குறிச்சி | 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

உளுந்தூர்பேட்டை அருகே 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆறுமுகம்

உளுந்தூர்பேட்டை அருகே 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த தர்பூசணியை பறித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தர்பூசணி பயிர் செய்து வரும் பெலிக்ஸ் என்ற 37 வயது இளைஞர் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது

Pocso Arrest

இது குறித்து சிறுமியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் பெலிக்சை கைது செய்த உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.