கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராசா, கண்ணகி எரித்ததாக இருக்கட்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
விருத்தாச்சலத்தில் நடந்த கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத்தண்டனை விதித்திருக்கிறது. மீதமுள்ள 12 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராசா, “ தமிழக வரலாற்றை பொருத்தவரை கண்ணகி எரித்ததாக இருக்கட்டும். தங்களது கவுரவத்துக்கு குறைச்சல் என கருதி 2 பேரை கொன்றது காட்டுமிராண்டித்தனமானது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.