வேதாரண்யம் அருகே அடகு கடையின் இரும்பு லாக்கரை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அடகு கடையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து தடவியல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பழுதடைந்திருப்பதால், கொள்ளையர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கடை உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் இரும்பு லாக்கருக்குள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததும், அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.