திருப்பூர் அருகே உள்ள வங்கியில் போலி நகைகளை வைத்து சுமார் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், நகை மதிப்பீட்டாளர் இல்லாத நேரம் பார்த்து வந்த இருவர் நகையை அடகு வைத்து ரூ.4,33,000 பெற்றுச் சென்றுள்ளனர். நகை மதிப்பீட்டாளர் வந்ததும் நகையை மதிப்பீடு செய்து பார்த்ததில், அவை போலி என தெரியவந்தது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.