குற்றம்

ஏடிஎம் மையங்களில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதா? - அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை

ஏடிஎம் மையங்களில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதா? - அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை

kaleelrahman

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

எஸ்.பி.ஐ வங்கியின் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்- களில் சென்சாரை மறைத்து நூதன முறையில் பல லட்சம் திருடப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதா என வங்கி அதிகாரிகளிடம் காவல் ஆணையர் கேள்வி எழுப்பினார். காவல் ஆணையருடனான ஆலோசனையில் எஸ்.பி.ஐ வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.