சென்னையில் கடந்த நான்கு நாட்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெரினாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட எட்டு பேரை கடந்த 19ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 21 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் சாகசம் செய்வதற்காக, இருசக்கர வாகனங்களை மாற்றியமைப்பதற்காக வரும் இளைஞர்கள் குறித்து, வாகனங்களை பழுது பார்ப்பவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: நீ குளிக்கிற வீடியோ இருக்கு... வெளிய சொன்னா கொண்ணுடுவேன்! - இளம் பெண்ணை மிரட்டியவன் கைது