Hyderabad murder
Hyderabad murder Twitter
குற்றம்

மீண்டுமொரு ‘லிவ்-இன்’ கொலை! 55 வயது பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்; தலையை மட்டும்...

Justindurai S

ஐதராபாத்தில் வசித்து வந்தவர் யர்ரம் அனுராதா ரெட்டி (55). கணவரை இழந்தவரான இவர், சந்திரமோகன் (48) என்பவரது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்தார். இதில் அனுராதா ரெட்டி மற்றும் சந்திரமோகன் ஆகிய இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டு லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

Murdered woman Anuradha

இந்நிலையில் சமீபத்தில் அனுராதா திடீரென காணாமல் போனார். அதேசமயம் அப்பகுதியில் உள்ள சாக்கடை ஒன்றில் பெண் ஒருவரின் தலை மட்டும் கிடப்பதை பார்த்தவ சிலர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது கண்டுபிடிக்கப்பட்ட தலை, காணாமல் போன அனுராதாவுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பெண்ணின் தலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, சந்திரமோகன் பிளாஸ்டிக் பேக்கில் கொண்டு வந்து தலையை வீசியெறிந்தது தெளிவாக பதிவாகி இருந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்த போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Hyderabad murder

நடந்தது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அனுராதா, சந்திரமோகன் வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் வந்து வசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து சந்திர மோகனுக்கும், அனுராதாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு அனுராதாவிடம் சந்திரமோகன் கடன் வாங்கி இருக்கிறார். அந்த கடனை திரும்பக் கொடுக்கும்படி அனுராதா பலமுறை கேட்டும் சந்திரமோகன் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் கடனை திரும்பக் கேட்டு தொல்லை செய்தததால் அனுராதாவை ஒருகட்டத்தில் தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார் சந்திரமோகன்.

கடந்த 12-ம் தேதி பணப் பிரச்னையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அனுராதாவை சந்திரமோகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கடையில் இருந்து கட்டிங் மெஷின் வாங்கி வந்து தலையை தனியாக வெட்டி எடுத்துள்ளார் அவர். அதோடு கால் மற்றும் கைகளை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்திருக்கிறார். பின் உடலின் மற்ற பகுதியை டிராலி ஒன்றில் வைத்திருந்தார். உடல் அழுகிப்போன வாசனை வெளியில் வராமல் இருக்க வாசனை ஸ்பிரே அடித்துள்ளார். தலையை மட்டும் பிளாஸ்டிக் பேக்கில் வைத்து சாக்கடையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அனுராதா உயிருடன் இருக்கிறார் என்பதை காண்பிப்பதற்காக அந்த பெண்ணின் செல்போனில் இருந்து தெரிந்தவர்களுக்கு மெசேஜ் செய்து, சந்தேகம் எழாமல் பார்த்து கொண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் கொலை செய்து, பின் அப்பெண்ணின் உடலை 35 துண்டுகளாக அறுத்து, வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்தார். அதேபோல் டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தில் 'லிவ் - இன்' உறவில் இருந்த நிக்கி யாதவ் என்கிற பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவக உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.