திருமணமான 3 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
சென்னை பள்ளிகரணையில் உள்ள கண்ணகி தெருவில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி (21). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்கு வருமாறு மனைவி அஞ்சலியை அய்யனார் அழைத்துள்ளார். ஆனால் அஞ்சலி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஞ்சலியை தாக்கிய அய்யனார் அவரின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அஞ்சலி உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அய்யனாரை கைது செய்துள்ளனர்.