குற்றம்

ஈரோடு அருகே மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது

ஈரோடு அருகே மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது

Rasus

ஈரோடு அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோம் மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி தீபரஞ்சனி. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இதனிடையே வீட்டில் தம்பதியினர் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில், மனைவி என்றும் பாராமல் தீபரஞ்சனியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் விவேகானந்தன். இதனையடுத்து விவேகானந்தனை கைது செய்த சூரம்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.