சீர்காழி அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி (39). இவருக்கும் தேவனூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 18
வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து, எடமணல் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிகளுக்குள் இடையே கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு நீடித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுதாகர், மனைவி மாலதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.