திருச்சி மாவட்டத்தில் பூட்டிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து 130 சவரன் நகைகள், வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவருடைய மனைவி லதா, தீபாவளிக்காக சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊர் திரும்பிய லதா, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 130 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைர தோடு, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்துள்ளனர்.