குற்றம்

கொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது

கொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது

webteam

தாயை கொன்று தலைமறைவாக இருந்த ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூர் அருகே ஹாசினி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்த கொலையாளி தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில்
வெளிவந்திருந்தார். இதையடுத்து குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தஷ்வந்த், அவரது தாய் சரளாவை கம்பியால் தாக்கி கொலை செய்தார். அத்துடன் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார்.  அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தமிழக காவல்துறையினர் தேடி வந்தனர். 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த தஷ்வந்தை, தமிழக காவல்துறை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தஷ்வந்தை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்துவரவுள்ளதாக கூறப்படுகிறது.