குற்றம்

பக்தரை சரமாரியாக தாக்கி பணம் பறித்த காவலர்

பக்தரை சரமாரியாக தாக்கி பணம் பறித்த காவலர்

rajakannan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிகேட்ட பக்தரை பாதுகாப்பு காவலர் சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் எழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வருவதையொட்டி காலை 5 மணி முதல் கோவிலை சுற்றி யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில் சேலத்தை சேர்ந்த தேவந்தர் என்ற பக்தர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெப்பகுளத்திற்கு செல்வதற்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என கேட்டார். அதற்கு எந்த வழியாகவும் செல்ல அனுமதிக்க முடியாது என கூறி தேவந்திரா சட்டையை பிடித்து இழுத்து சென்று அடித்து உதைத்தார். மேலும் அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.