குற்றம்

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: பைக் பற்றி 1,20,000 பேரிடம் விசாரணை

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: பைக் பற்றி 1,20,000 பேரிடம் விசாரணை

webteam

கர்நாடகாவில் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த மாதம் பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே குற்றவாளிகளின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் புகைப்படம் வெளியிட்டாலும், அதில் குற்றவாளிகளின் உருவம் தெளிவாக இல்லை என்பதால் அவர்களைப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் அந்த குற்றவாளி பயன்படுத்திய இருசக்கர வாகனம் குறித்து இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றாவாளி பயன்படுத்திய இருசக்கர வாகனம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.